search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜமைக்கா தல்லாவாஸ்"

    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜமைக்கா. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 லீக்கில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கயானா அமேசான் வாரியர்ஸ் - ஜமைக்கா தல்லாவாஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் களம் இறங்கியது. கேமரூன் டெல்போர்ட் (34), ஷிம்ரோன் ஹெட்மையர் (48), ஜேசன் முகமது (54) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது.


    இம்ரான் தாஹிர்

    பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா தல்லாவாஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் க்ளென் பிலிப்ஸ் (27), ஜான்சன் சார்லஸ் (25) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ராஸ் டெய்லர் (60), ரோவ்மேன் பொவேல் (55) ஆட்டமிழக்காமல் சிறப்பாக விளையாடி ஜமைக்கா அணி 18.1 ஓவரில் 177 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    கரிபியன் பிரீமியர் லீக்கில் ஜமைக்கா தல்லாவாஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பார்படோஸ் டிரிடென்ட்ஸ் #CPL2018
    கரிபியின் பிரீமியர் லீக் டி20 போட்டியில் புளோரிடாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜமைக்கா தல்லாவாஸ் - பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பார்படோஸ் அணியின் வெயின் ஸ்மித், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெயின் ஸ்மித் 18 ரன்னிலும், ஹசிம் அம்லா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த மார்ட்டின் கப்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    அதன்பின் வந்த ஸ்டீவன் ஸ்மித் 44 பந்தில் 63 ரன்களும், ஷாய் ஹோப் 35 பந்தில் 43 ரன்களும் அடிக்க 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் க்ளென் பிலிப்ஸ் 36 ரன்களும், ஜான்சன் சார்லஸ் 42 ரன்களும் அடித்து வெளியேறினார்கள். 3-வது வீரராக களம் இறங்கிய கென்னார் லெவிஸ் 17 ரன்னில் வெளியேறினார்.



    4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லருடன் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது ஜமைக்கா அணியின் வெற்றிக்கு 7.1 ஓவரில் (43 பந்தில்) 57 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இருவரும் கடைசி வரை களத்தில் நின்றும் 57 ரன்கள் அடிக்க முடியவில்லை. அவர்களால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பார்படோஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    பிராவோ சகோதரர்கள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க டிரின்பாபோ நைட் ரைடர்ஸ் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது. #CPL2018
    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 12-வது ஆட்டம் புளோரிடாவில் நேற்று நடைபெற்றது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டிரின்பாகோ பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ஜமைக்கா தல்லாவாஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பரும் ஆன க்ளென் பிலிப்ஸ் 55 பந்தில் 80 ரன்களும், டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 34 பந்தில் 72 ரன்களும் குவிக்க 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சுனில் நரைன் டக்அவுட்டிலும், கிறிஸ் லின் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.



    அதன்பின் வந்த கொலின் முன்றோ 51 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார். டேரன் பிராவோ 35 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கேப்டனும் ஆல்ரவுண்டரும் ஆன வெயினி் பிராவோ 11 பந்தில் 5 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

    கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் ஜவோன் சியர்லெஸ் பவுண்டரி விளாச டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றி பெற்றது.
    ×